பெரமுன உறுப்பினர்கள் வேறு தரப்புடன் இணையலாம் பிரிந்தும் செல்லலாம்.
எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெரமுன உறுப்பினர்கள் வேறு தரப்புடன் இணையலாம் பிரிந்தும் செல்லலாம்.
கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை (10) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நேற்றைய சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பசில்,“வாராந்த கூட்டமே நேற்று இடம்பெற்றது. அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளனர்.நானும் அதில் பங்குபற்றினேன்” என கூறினார்.
கலந்துரையாடல் குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பசில் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்ளவும் மக்கள் மத்தியில் தங்களின் கட்சிகள் மற்றும் மீண்டும் செல்வாக்கை உயர்த்தும் நோக்கத்திலேயுமே இவ்வாறு அடிக்கடி
சந்தித்து எதிர்ப்பு வெளியிடுவதும், ஆதரவு வெளியிடுவதுமாக இருக்கின்றனர் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானத்தை ஜூன் மாதம் 16 திகதிக்கு முன்னர் தீர்மானிப்பது சிறந்தென அவர் மேலும் தெரிவித்தார்.