Breaking News
இலங்கை போர் செய்திகளை அறிக்கையிட்ட மூத்த ஊடகவியலாளர் காலமானார்
.
இலங்கை போர் குறித்து செய்தி அறிக்கையிட்ட மூத்த இந்திய ஊடகவியலாளர் பி.முரளிதர் ரெட்டி காலமானார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு டெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.
தி ஹிந்துவின் டெல்லி பணியகத்தில் சுமார் மூன்று தசாப்தங்களாக அவர் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நிருபராகவும் செயற்பட்டுள்ளார்.
ஒரு பிராந்திய செய்தியாளராக ஊடக வாழ்க்கையை தொடங்கிய அவர் அரசியல் நிருபராகவும், பல முக்கிய செய்திகளையும் வெளியிட்டுள்ளார்.
1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் அவர் அறிக்கையிட்டிருந்தார்.
இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத்தில் அவர் கொழும்பில் தங்கியிருந்து அறிக்கையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.