அனுர 60 வீதமான வாக்குகளை பெறுவாரா?: தேசிய மக்கள் சக்தியின் கணிப்பு
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் இந்த வாக்கு வீதம் அதிகரிக்கும் என்றும், கருத்து கணிப்புகளை விடவும் வாக்கு வீதம் அதிகமாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இம்முறை ஜனாதிபதி தேர்தல் என்பது பல பிரிவினருக்கான போட்டி அல்ல. திருடர்களுக்கும் நல்லவர்களுக்குமான போட்டியாகும்.
மக்கள் தமது தெரிவை சரியாக செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. சஜித் மற்றும் ரணிலின் மேடையில் இருப்பவர்கள் ஊழல் வாதிகள். அதனால்தான் அங்கும் இங்கும் மாறிக்கொண்டு இருக்கின்றனர்.
அவர்களுக்கென கட்சியொன்று இல்லை. கொள்கையொன்று இல்லை. அதில் எஞ்சியுள்ளது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அதனால் மக்கள் இலகுவாக தமது தெரிவை மேற்கொள்ள முடியும்.
அனுர வெற்றிபெறுவது உறுதி. தற்போதைய கருத்து கணிப்புகள் பிரகாரம் அவர் 60 வீத வாக்குகளை பெறுவார். எதிர்காத்தில் இந்த வீதம் இன்னும் அதிகரிக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.