Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழில் மதுபான நிலையம் திறப்பிற்கு எதிராக போராட்டம்

யாழில் மதுபான நிலையம் திறப்பிற்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பதாகைகளை தாங்கியவாறு கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தை கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பிரதேச மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நெடுந்தீவு சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம், ஊர்வலமாக சென்று நெடுந்தீவு பிரதேச செயலரிடம் மகஜரொன்றை கையளித்த பின்னர் அரசாங்க அதிபருடன் பேசி குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக பிரதேச செயலர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது-