Breaking News
தம்புள்ளையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல்
.

தம்புள்ளையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அலுவலகமும், அங்கு இருந்த அனைத்து பதாதைகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பில் தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவர்கள் சம்பவம் தொடர்பில் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.