சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் உருவானது.
.
சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் உருவானது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று(ஜூன் 6) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை மையம் முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விட்டுவிட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது
இந்நிலையில் மாலைக்கு பிறகு சென்னையில் அரும்பாக்கம்,அண்ணா நகர், சூளைமேடு, கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், வானகரம், முகப்பேர், அம்பத்தூர், போரூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை சிந்தாதிரிப்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், பெருங்களத்தூர், பாடி, பழவந்தாங்கல், பரங்கிமலை, கிண்டி, பட்டினம் பாக்கம், சென்ட்ரல், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. பணி முடிந்து வீடு திரும்பியோர் மட்டும் மழையில் சிக்கி சற்று சிரமத்திற்கு ஆளாகினர். ஆயினும் மழையால் வெக்கை தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பெருவாரியான மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.