Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாளை கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது.

கல்முனையில் நாளை கடைகளுக்கு விடுமுறை.

கல்முனையில் நாளை கடைகளுக்கு விடுமுறை.

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளை கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார நடவடிக்கைகளுமின்றி மூடுவதாகவும்  இத் தொழிலாளர்களுக்காக சுதந்திரத்தை வழங்குவதற்காகவும் அத்தினத்தில் எதுவித வியாபார நடவடிக்கைகளும் நடைபெறமாட்டாது என்பதனையும் வர்த்தகர்களுக்கும்  நுகர்வோர்களுக்கும் அறிவிப்பதாக கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2024.05.01 திகதி இந்நாளில் உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை காலமாக எமது பொதுச் சந்தையின் ஊழியர்களுக்கான விடுமுறை வழங்கப்படாமை மிகவும் கவலையளிப்பதாக எமது பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எமது வர்த்தக சங்கத்திடம் பல முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக எமது கல்முனை மாநகர பொதுந் சந்தை வர்த்தக சங்கம் ஊழியர்களின் மேலான கோரிக்கையை கவனத்தில் கொண்டு முதலாளித்துவமாகிய வர்த்தகர்களின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற ஊழியர்களின் வேண்டுகோளை நிறை வேற்று முகமாக, எமது கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார நடவடிக்கைகளுமின்றி மூடுவதாகவும், இத் தொழிலாளர்களுக்காக சுதந்திரத்தை வழங்குவதற்காகவும் அத்தினத்தில் எதுவித வியாபார நடவடிக்கைகளும் நடைபெறமாட்டாது என்பதனையும் வர்த்தகர்களுக்கும்  நுகர்வோர்களுக்கும் அறியத் தருகின்றோம்.

ஆகவே  பொதுச் சந்தையிலுள்ள சகல கடை உரிமையாளர்களும் தங்களது கடைகளை மூடி இத்தொழிலாளர்களுக்கான இத் தினத்தில்  இந்த கட்டாய ஓய்வினை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் பணிவுடன் வேண்டிக் கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.