Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தாய்லாந்தில் 6 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் வென்ற இலங்கை மெய்வல்லுநர்கள் நாடு திரும்பினர்!

,

தாய்லாந்தின் பெத்தும் தானி விளையாட்டரங்கில் நடைபெற்ற தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சம்பயின்ஷிப்பில் 6 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 11 பதக்கங்களை வென்ற இலங்கை மெய்வல்லுநர்கள் வியாழக்கிழமை (26) நாடு திரும்பினர்.

தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 1500 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ருசிரு சத்துரங்க இரண்டு தங்கப் பதக்கங்களையும் பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் நெத்மிகா மதுஷானி ஹேரத் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றனர்.

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் விக்னராசா வக்சனும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனஆராச்சியும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வக்சனும் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனஆராச்சியும், 400 மீற்றர் சட்ட வேலி ஓட்டப் போட்டியில் அயோமல் அக்கலன்கவும் பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் வத்சலா ஹப்புஆராச்சியும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

இது இவ்வாறிருக்க ஆண்களுக்கான முப்பாய்ச்சிலில் சவ்ரின் அஹமத் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இலங்கை அணியில் இடம்பெற்ற அமாஷா டி சில்வா (100 மீற்றர்) மாத்திரமே பதக்கம் வெல்லத் தவறினார்.

இலங்கை அணியினர் நாடு திரும்பியபோது படை அதிகாரிகளும் அவர்களது உறவினர்களும் வரவேற்றனர்.