பலதும் பத்தும்:- 17,04,2025 - ஆழியவளை மீனவ மக்களுக்கும் கரவலை முதலாளிகளுக்கும் இடையே முறுகல்!
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை!

பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை
பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை(Holy Thursday, Maundy Thursday) என்பது கிறித்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் இறுதி நாள்களை நினைவுகூர்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்றஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற வாரத்தில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும்.நற்செய்திகளில் கூறியுள்ளது போன்று, திருத்தூதர்களுடனான இயேசுவின் இறுதி இராவுணவு, மற்றும் கால்களைக்கழுவுதல் ஆகிய நிகழ்வுகளை கிறித்தவர்கள் இந்நாளில் நினைவுகூருகின்றனர். இவ்விரவு கடைசி முறையாக இயேசு தனது சீடர்களுடன் கழித்த நாளாகும். அவர் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும்அவர்களுக்குக் கூறினார். இது புனித வாரத்தின் ஐந்தாவது நாளாகும். இதற்கு முந்திய நாள் புனித புதன், இதற்குஅடுத்த நாள் புனித வெள்ளி ஆகும்.
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டியமட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்தவேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர்குடிக்கவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் அறிவுறுத்துகிறது.
படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் 50 பேர்உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் குறைந்தது 50 பேர்உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து செவ்வாய்க்கிழமை, கொங்கோ ஆற்றில் இடம்பெற்றுள்ளது. சுமார் 400 பயணிகளுடன் சென்ற மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகு ம் பண்டகா நகருக்கு அருகே தீப்பிடித்துகவிழ்ந்தது என அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
ஆழியவளை மீனவ மக்களுக்கும் கரவலை முதலாளிகளுக்கும் இடையே முறுகல்!
இன்றையதினம் ஆழியவளை மீனவ மக்களுக்கும் கரவலை முதலாளிகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது இதில்கடற்தொளில் சங்கம் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது தெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.. ஏற்கனவேகுறிப்பிட்டது போன்று தங்கள் முகங்களை மூடி மறைக்கும் வகையில் நல்லவர்கள் போல் காட்டி கொள்கின்றனர். இதைஅறியாத ஒரு சில மீனவர்கள் அவர்களின் வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர். மக்கள் மத்தியில் கரவலை சம்மாட்டிக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பல தொகையான பணம் கை மாற்றப்பட்டிக்கலாம்என பேச்சுக்களும் இடம் பெறுகின்றன.
தேர்தல் சட்டங்களை மீறிய 18 வேட்பாளர்கள் கைது !
கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் பொலிஸாரினால்கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
8 கோடி இந்திய ரூபா மதிப்பிலான போதைப்பொருள்!
இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த 8 கோடி இந்திய ரூபா மதிப்பிலான போதைப்பொருள்கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்த 32 வயதான அலெக்ஸ் என்பவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக இந்திய மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்குதகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை கடந்த ஒரு வாரமாக பொலிஸார் கண்காணித்து வந்தனர். இதனிடையே, அவர் புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு படகு மூலமாக போதைப்பொருட்களைக்கடத்தி செல்லவிருப்பதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை மேலவிலக்குடியில் இருந்த அலெக்ஸை இரு தினங்களுக்கு முன் கைதுசெய்த மத்திய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார், அவரிடமிருந்த 950 கிராம்எடையுள்ள, இந்திய ரூ.8 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளையும், இந்திய ரூ.2 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், புதுக்கோட்டை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலெக்ஸை நேற்றுமுன்தினம் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தற்போது கைதாகியுள்ள அலெக்ஸ் மீது பல்வேறு மாநிலங்களில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில் இரு இளைஞர்களை கடத்தி தாக்கியவன்முறை கும்பல்!
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பிசென்றுள்ளனர். சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களும் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபின்னர் தமது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை , முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த வன்முறை கும்பல் அவர்களை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்று மூர்க்கத்தனமாக தாக்கிய பின் வீதியில் வீசி விட்டு சென்றுள்ளனர்.வீதியில் காயங்களுடன் காணப்பட்ட இரு இளைஞர்களையும் வீதியால் சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனாவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினா் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.
யாழில் /வீதியோரமாக நண்பருடன்உரையாடிக்கொண்டிருந்தவருக்கு எமனான மோட்டார்சைக்கிள்!
யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்தமோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த இரத்தினவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியை வீதியோரமாக நிறுத்தி நண்பர்களுடன்உரையாடிக்கொண்டிருந்த வேளை மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகநின்றவரை மோதி தள்ளியது.
அதில் குறித்த நபரும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் ஆக மூவரும் காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை , சிகிச்சை பலனின்றி இரவீந்திரன்உயிரிழந்துள்ளார்.தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.