வவுனியாவில் வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள் - களத்தில் இறங்கிய அதிகாரிகள்
.
வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.
கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல், விபத்துக்களை குறைக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையினால் மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 1000 ரூபா, தண்டம் 1000 ரூபா, தண்டப்பணம் ஏற்றியிறக்கல் 500 ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 250 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 250 ரூபா விதிக்கப்படுமென பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.