Breaking News
கொழும்பு மாவட்டத்தில் 90 வீதமான தபால் வாக்குகள் சரியானவை: யாருக்கு அதிகம் என்பதை கூற முடியாது
.
கொழும்பு மாவட்டத்தில் தபால் வாக்குகள் 90 வீதத்துக்கும் அதிகமானோர் வழங்கியுள்ளதாகவும் அதில் எதவித தேர்தல் மீறல்கள் பதிவாகவில்லை எனவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே தெரிவித்தார்.
எனினும், பயன்படுத்தப்பட்ட தபால் வாக்குகள் எந்த வேட்பாளருக்கு எத்தனை வீதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அந்தந்த அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் தமக்கு தபால் வாக்குகளில் இலாபங்கள் உண்டு என தெரிவிக்கப்படும் கூற்றுக்களில் உண்மைத் தன்மை இல்லை எனவும் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகளால் தெளிவாக தேர்தல் தவறான விடயத்திற்குள் சேர்வதாகவும் அதற்கு எதிராக தண்டனைகள் வழங்க முடியும் எனவும் கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.