Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கேதீஸ்வரம் கொடியேற்றம் நாளை – யாழில் இருந்து எடுத்து செல்லப்பட்ட கொடிச்சீலை!

1982ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்தது.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொடிச்சீலை  எடுத்துச் செல்லப்பட்டது.  கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

1982ஆம் ஆண்டிற்கு முன்னர்  யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்த நிலையில் யுத்த காலத்தில் அந்த முறை கைவிடப்பட்டிருந்தது.

2022ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் 3ஆவது முறையாகவும்  இம்முறை கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.