Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசித்தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருபது வருடங்களுக்கு மேலாக வேண்டுகோள்.

மட்டக்களப்பு (Batticaloa) – முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை.

மட்டு முகத்துவார வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கை; அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

ட்டக்களப்பு (Batticaloa) – முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (Light house) பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே இந்த உத்தரவை வழங்கியுள்ளார். வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசித்தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருபது வருடங்களுக்கு மேலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

110 வருடங்கள் பழைமை வாய்ந்த வெளிச்ச வீடு, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வர்ணம் பூசாமல் பழுதடைந்த நிலையில் இருப்பதை அவதானித்த அமைச்சர், உடனடியாக வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வெளிச்ச வீட்டுக்கும் நாவலடி கடற்பகுதிக்கும் இடையே உள்ள ஏரிப்பகுதியை ஆழப்படுத்தி தருமாறு கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அதனையும் அமைச்சர் கவனத்தில் எடுத்துள்ளார்.