Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு!

ரஷ்ய சுகாதார அமைச்சர் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தர ஆர்வமாக உள்ளதாகக் திரு. ஜகாரியன்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். திரு. லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு  (30) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.

ரஷ்ய சுகாதார அமைச்சர் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தர ஆர்வமாக உள்ளதாகக் திரு. ஜகாரியன் இதன்போது கூறினார். சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

ரஷ்ய தூதர் இதன்போது மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களை வலுப்படுத்த ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.

நாட்டில் மக்களுக்கு உகந்த சுகாதார சேவையை உருவாக்குதல், வீண்விரயம், மோசடி மற்றும் ஊழல் இல்லாதது மற்றும் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி நகர்த்தும் அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு ரஷ்ய அரசாங்கத்தின் பாராட்டுகளை தூதர் தெரிவித்தார்.
நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் ஜகாரியன் கூறினார்.