Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30 ஆம் திகதியன்று வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம்!

அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு கோரும் ஏற்பாட்டுக்குழு.

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி  30 ஆம் திகதியன்று வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் - அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு கோரும் ஏற்பாட்டுக்குழு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி  30 திகதியன்று வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து யாழ் ஊடக அமையத்தில் இன்று ( 25)/ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த குறித்த ஏற்பாடுக்குழு மேலும் கூறுகையில் -
அண்மையில் ஐ நா பிரதிநிதி யாழ் வந்து செம்மணியின் தடையங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயல் நீதிக்கான  சமிக்ஞை கிடைக்கும்  என நம்பினோம்.  ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது.

ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றது போன்று அவரது கருத்து இருக்கின்றது.
நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதற்கான வலியுறுத்தலையே இன்றும் வலியுறுத்துகின்றோம்.

எனவே எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்மிக்கை இல்லை.
எனவே எதிர்வரும் 30 ஆம் திகதியன்று செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவுய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம்.
குறித்த போராட்டத்துக்கு மத தலைவர்கள், பல்கலை சமூகம், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளமை குறிபிடத்தக்கது.