Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி; மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது டிடி தமிழ்!

.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் இடம்பெறும் வரி புறக்கணிக்கப்பட்டதாக கூறி சர்ச்சை வெடித்தது.டிடி தமிழ் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) சென்னையில் நடத்திய இந்திய தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை பாடும்போது சரியாக பாடவில்லை.இதுதொடர்பான காணொளி வெளியாகிய நிலையில், ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து டிடி தமிழ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார் எனத் தெரிவித்துள்ளது. 

டிடி தமிழ் அறிக்கை

மன்னிப்பு கேட்ட டிடி தமிழ்

மேலும், கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ள டிடி தமிழ், தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை என்றும், வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது.மேலும், இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, தமிழக ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம், தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில், ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என்றும், தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது ஆளுநருக்கு அதீத மரியாதை உண்டு எனக் கூறியுள்ளார்.மேலும், இந்த குளறுபடி குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.