அனுர மீது ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு; இலங்கை சீர்திருத்த அமைப்பு சட்ட நடவடிக்கை
.
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு சரியாக செயற்படத் தவறியமை தொடர்பில் இலங்கை சீர்திருத்த அமைப்பின் சட்டப் பிரதிநிதி தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விசேட முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ள அவர், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியானது தேர்தல் சட்டங்களை மீறுவதாக பல சந்தர்ப்பங்களில் அவதானித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
இவ்வாண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி மஹரகம இளைஞர் நிலையத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்திற்கு அரச தாதியர்களை சீருடையில் அழைத்து வந்தமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுத்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது தொடர்பான முறைப்பாடு தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்தல் சட்டங்கள் மற்றும் அரசியல் நெறிமுறைகளை மீறுவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவால் எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.