Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஆடு களவாடும் சிறிலங்கா காவல்த்துறை!- நெடுந்தீவிலிருந்து இறைச்சியுடன் வந்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது!!

.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் வந்த காவல்துறை உத்தியோகஸ்தரை இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் வளர்த்து வந்த ஆடொன்று காணாமல் போயுள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை , விடுமுறையில் வீடு செல்வதற்காக நெடுந்தீவு காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு படகில் வந்து இறங்கிய வேளையில் , அவரது கையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ரெஜிபோம் பெட்டி காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் படகில் வந்த இளைஞர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கி குறித்த பெட்டியை சோதனை செய்த போது , அதற்கு ஒரு தொகை இறைச்சி காணப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் காணாமல் போன ஆட்டினை இறைச்சியாக்கி காவல்துறை உத்தியோகஸ்தர் எடுத்து செல்வதாக இளைஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.

அதனால் , மீட்கப்பட்ட இறைச்சியையும் , காவல்துறை உத்தியோகஸ்தரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட இறைச்சி, ஆட்டிறைச்சியா என்பதனை கண்டறிந்த பின்னரே மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.