ரணிலுக்கே ஆதரவு; திட்டவட்டமாக தெரிவித்தார் பிள்ளையான்!
தொங்குபாலத்தினை கடந்து ஒரு உறுதியான ஒரு பொருளாதார கட்டமைப்பு உருவாகவேண்டும்.
ரணிலுக்கே ஆதரவு; திட்டவட்டமாக தெரிவித்தார் பிள்ளையான்!
உறுதியான சிறந்த திட்டத்துடன் உள்ள தலைவர்கள் யாரையும் இந்த நாட்டில் காணமுடியாத நிலையுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரை ஆதரிக்க தமது கட்சி நடவடிக்கையெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 06பில்லியன் ரூபா செலவில் வீதி அமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 07பில்லியன் ரூபா செலவினா வீதி அபிவிருத்திப்பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகஇராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் மற்றும் நீர்பாசன திணைக்கள அதிகாரிகள்,விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 23 வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 1053மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இதன்கீழ் குளங்கள்,கால்வாய்கள் உட்பட விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான நீர் வழங்கல் பகுதிகளை விரிவுபடுத்தி அதன் ஊடாக விவசாய செய்கையினை அதிகரிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கும் வகையில் இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவில் நிறைவுசெய்து மக்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் இதன்போது தீர்த்துவைக்கபபட்டன.