Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு.

யாழ் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் நேற்றைய தினம் (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு புகையிரத நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் நூலகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டதோடு புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, கருணாநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், புகையிரத நிலைய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில்  புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு நேற்றைய தினம் (08) நடைபெற்றது.
இவ் களஞ்சியசாலையை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர குமார ஜெயக்கொடி அவர்கள் திறந்து வைத்தார்.

நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், புகையிரத நிலைய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.