Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை - இராணுவ பேச்சாளர்!

பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றனர்.

முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருணகமகே நிராகரித்துள்ளார்.

ஐலண்ட் நாளிதழிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர் ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

படையினர் அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர், ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர். நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்க ரெஜிமன்டின் 12வது பட்டாலியனின் முகாம் அது 2025 ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைது செய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டோம், என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர் பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன, ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரால் கைவிடப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்வதற்காக சிலரை அழைத்த பின்னர் இராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள இராணுவ பேச்சாளர் இது முற்றிலும் பொய் என தெரிவித்துள்ளார்.