Breaking News
மழைநீரில் வந்த விஷப்பாம்பு கடித்ததில் இளைஞர் மரணம்
.
வவுனியா – நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியில் வெள்ள நீரில் வந்த பாம்பு கடித்ததில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மழை காரணமாக வீட்டு முற்றத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் சேகரித்து கொண்டிருந்த போது, மழை நீரில் நீந்தி வந்த பாம்பு அவரை கடித்துள்ளது.
உடனடியாக அவர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அம்பியூலன்ஸ் வண்டி வவுனியாவை வந்தடைய நீண்ட நேரமாகியதால் இளைஞன் உயிரிழந்துள்ளார்.