Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

‘தாரா’ வை இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!

.

காலனித்துவ காலத்தில் பிரித்தானியாவினால் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தாரா சிலை உட்பட பல தொல்பொருட்கள் இலங்கைக்கு மீள கொண்டு வரப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தினால் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பல தொல்பொருட்கள் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

” நமக்கு சொந்தமான புராதன பொக்கிஷங்களை மீண்டும் கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் நெதர்லாந்தில் இருந்து இதே போன்ற பல பொருட்களையும் நாங்கள் பெற்றுள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற கல்வி முறையொன்று மக்கள் மனதில் தமது நாட்டைப் பற்றிய பெருமிதத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தாரா சிலை
தாரா சிலை என்பது இலங்கையின் 7- 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெண்கலச் சிலையாகும். இது பௌத்த சமய பெண் தெய்வமான தாராவின் சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் கண்டியின் கடைசி மன்னரை வென்று கண்டி இராச்சியத்தை கைப்பற்றினர். அப்போது இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதியாக இருந்தவர் ராபர்ட் பிரௌன்ரிக் என்பவர். இவரது பதவிக்காலம் முடிந்து இவர் பிரிட்டன் சென்றபோது தன்னுடன் இந்தச் சிலையையும் கொண்டு சென்றார். பின்னர் இச்சிலையை இவர் 1830 இல் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.