Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலுக்கு மற்றுமொரு ‘நற்செய்தி’: சஜித்துக்கு சோகம் – கட்சித் தாவும் முக்கிய புள்ளி

.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைப்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களும் ஐ.தே.கவின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்ட ராஜித சேனாரட்ன, விரைவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் நோக்கில் பல்வேறு கட்சிகளை இணைந்து கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டணியை உருவாக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக ராஜித சேனாரட்னவும் செயல்பட உள்ளார். கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை இணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐ.ம.சவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, விரைவில் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை வெளிப்படுத்த உள்ளதாக அறிய முடிகிறது.சப்ரகமுவ மாகாண ஆளுநரும் மயந்த திஸாநாயக்கவின் சகோதரருமான நவீன் திஸாநாயக்க, இவரை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றிய மயந்த திஸாநாயக்க, தாம் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள உள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென நிராகரித்துடன், தாம் தொடர்ந்து எதிர்க்கட்சியிலேயே செயல்பட உள்ளதாகவும் கூறினார்.