யோஷித, ஜோன்ஸ்டன் உட்பட 1500 பேருக்கு துப்பாக்கிகள்; மகிந்த வழங்கியதாக வெளியான பரபரப்பு தகவல்
.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலப்பகுதியில் அவரது மகன் யோஷித ராஜபக்ச, ‘எவன்ட்கார்ட்’ உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு 8 துப்பாக்கிகளும், நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு 9 துப்பாக்கிகளும், யோஷித ராஜபக்சவுக்கும் 7 துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றின் மொத்த எண்ணிக்கை 24 ஆகும். mm9 ரக 16 துப்பாக்கிகளும் அதில் உள்ளடங்குகின்றன. இந்த துப்பாக்கிகளை விரைவில் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் மீள வழங்கவில்லையெனில் 1916ஆண்டு 33 இலக்க துப்பாக்கி கட்டளை சட்டத்திற்கமைய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
துப்பாக்கிகளுக்கு சொந்தமான ரவைகளை கடற்படைக்குச் சொந்தமான வெலிசரையில் அமைந்துள்ள களஞ்சியசாலைக்கு குறித்த தினத்திங்கு முன்னர் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
நிஷ்ஷங்க சேனாதிபதி , யோஷித ராஜபக்ச , ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகிய மூவருக்கும் வழங்கியுள்ள துப்பாக்கிகளின் விபரங்கள் பின்வருமாறு,
நிஷ்ஷங்க சேனாதிபதி,
01. AHBT 229 9mm Glock 19
02. 07698 9mm Ruger AZ USA 322
03. AHBT 225 9mm Glock 19
04. G 388417 9mm CZ P 10-c
05. AGRU 058 9mm Glock 19
06. F269104 9mm CZ p10-c
07. A 687997 9mm CZ 85
08. 24SLG2 – 0164 12 Bore Repeter
09. 24 SLG2 – 0165 12 Bore Repeter
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,
01. AF 408 9mmcz75
02. AHBT 219 9mm Glock
03. ESM 893 9mm Glock
04. 24 SLG 2- 0002 12 Bore Repeter
05. 24 SLG 2- 0151 12 Bore Repeter
06. 24 SLG 2 – 0010 12 Bore Repeter
07. 7000482/240888 12 Bore Repeter
08. 15333989 12 Bore Repeter
யோஷித ராஜபக்ச,
01. PT0195 9mm
02. LPY 904 9mm
03. RXR468 9mm
04. 55451 9mm
05. VX 679 9mm
06. A 11966 pofsmg pk
07. AHGS 683 9 mmGlock 48