Breaking News
வட மாகாண ஆளுனராகும் நாகலிங்கம் வேதநாயகன்; இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
.
வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த பி.எஸ்.எம். சார்லஸ் தனது பதவியில் இருந்து கடந்த 23ஆம் திகதி இராஜினாமா செய்தடை தொடர்ந்தே மேற்படி வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னைய ஆட்சியில் இடைநடுவே சில அரசியல் தலையீடுகள் காரணமாக பதவி விலகியிருந்தார்.
இதன் அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பு முன்வந்தமையால் வேதநாயகன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஆளுநராகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.