"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி!
ஆதவ் அர்ஜுனா பேசியது உண்மைக்கு மாறானது என்றும், காலம் பதில் சொல்லும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக மிரட்டியதால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என கூறியிருந்தார்,
ஆதவ் அர்ஜுனா பேசியது உண்மைக்கு மாறானது என்றும், காலம் பதில் சொல்லும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக கொடுத்த அழுத்தத்தால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், ரஜினிகாந்த் அப்படிப்பட்டவர் அல்ல என்றும், ஒரு பெரிய ஆளுமையை இது போன்று அவதூறாக பேசக் கூடாது என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தனக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த் ‘காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ என தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான கருத்தை தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறு கருத்தை கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலக நண்பர்கள் மற்றும் நக்கீரன் கோபால், ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா சர்ச்சைப் பேச்சு:தற்குறி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டுமென விஜய்க்கு அர்ஜுனமூர்த்தி கடிதம்
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது பிரபல நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில், உடல் நலம் காரணமாக 2020-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி அரசியலில் ஈடுபட போவதில்லை என்று அறிவித்தார்.


