பலதும் பத்தும்,,,
,

- யாழ்.பல்கலைக்கழக பீடாதிபதிக்கு ஆதரவாக போராட்டம்! :பதவியை இராஜினாமா செய்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமிற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
- 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்!: இன்று (27) 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பமாவதோடு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை
இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 முதல் 11 வரை
மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 9 வரையிலும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
- உள்ளூராட்சித் தேர்தல் விரைவில்! : நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான வரைவு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக சமர்ப்பித்துள்ள நிலையில், தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடாத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
- நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பெண் கைது! :நாயை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண் இன்று மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.