Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

புதிய கருவியொன்றினை உருவாக்கி , புலம்பெயர் ஈழத்தமிழ் மகன் பிரான்ஸ் மருத்துவதுறையில் சாதனை!

.

பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் பெற்றுள்ளார்.

மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைவளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார்.

இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை, உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு, ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டாதகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது.

நாடளாவியரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர்.அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் "cœur léger " எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார்.