Breaking News
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சிறிதரன்
.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று ஞாயிறு காலை இடம்பெற்றது. இதன்போது அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார்.