Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் மீதான தடைகள்”!

ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் அறிவித்தல்!

“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடைகள்” என்ற தலைப்பில் ஐக்கிய இராச்சியத்தின், வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகம் (FCDO) வெளியிட்ட 2025, மார்ச் 24 எனத் திகதியிட்ட செய்தி வெளியீட்டை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கவனத்தில் கொள்கிறது.

செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி, ஐக்கிய இராச்சியத்தின் அரசானது நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளது; அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகளாவர். மேலும், ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் வெளியீடானது, "இதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட உறுதிமொழியை" குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது, இது தொடர்பில், ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கையாகும்; இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை ஆகியவை அடங்கும் என்பதை அமைச்சு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறது. நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குகின்றன. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்களிடம், இன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் தெரிவித்தார்.