அடுத்த சில நாட்களில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார்! இம்மானுவேல் மக்ரோன்.
.
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மைக்கேல் பார்னியர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி மைக்கேல் பார்னியரை அந்நாட்டின் பிரதமராக நியமித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்வது இதுவே முதல்முறை.
எனினும், 2027 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவியில் நீடிப்பார் என பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், மிஷேல் பார்னியர் பிரதமராக இருந்த குறுகிய காலத்திலேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக பிரான்ஸ் ஜனாதிபதி முன்னாள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.