Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிறிநேசன் ஆதங்கம்: இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை!

.

புரையோடி போயிருக்கின்ற இனப்பிரச்சினை விடயமாகவும், அதற்கான தீர்வு என்ன அதனை எவ்வாறு கையாள்வது, அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர தனது சிம்மாசன உரையில் குறிப்பிட வில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடியில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிததுள்ளார்.

சிம்மாசன உரையின் போது முற்போக்கான கருத்துக்கள் கூறப்பட்டதை மறுக்க முடியாது.மேலும் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றபோது நடைபெற்றபோது, அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதும் சட்டவாட்சி மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினையும் அவர் தெளிவாக கூறியிருந்தார்.

இந்த கருத்துக்களை பொதுவாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். இருந்த போதிலும் அங்கு காணப்பட்ட குறைபாட்டை குறிப்பிட்டாக வேண்டும்.புரையோடி போயிருக்கின்ற இனபிரச்சினை விடயமாகவும், அதற்கான அதற்கான தீர்வு என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதி அந்த இடத்தில் சுட்டிக்காட்டி இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.