Breaking News
விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கிரெஜ்சிகோவா
.
“லண்டன்:விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் கிரெஜ்சிகோவா முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பவுலினி 2வது செட்டை6-2 என கைப்பற்றினார்.வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரெஜ்சிகோவா 6-4 என கைப்பற்றி அசத்தினார்.
அத்துடன் சாம்பியன் பட்டமும் வென்றார். கிரெஜ்சிகோவாவுக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.”,