Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் சந்திரிக்கா.

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளேன்.

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்- சந்திரிக்கா

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர்  இதனைக்  குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவே உள்ளேன்.சுயலாபம் கருதி ஏதேனும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக ஆட்சிக்கு வருவதற்கே இன்று பலரும் முயற்சிக்கின்றனர்.

நாடு தொடர்பாகவும் நாட்டுமக்கள் தொடர்பாகவும் அக்கறையில்லாத சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான சுயலாப அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. நாம் நாடு தொடர்பில் சிந்தித்தே எனது அரசியல் பயணம் அமைந்தது. இதனால் நான் பலவற்றை இழக்கவும் நேரிட்டது.

இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்ளையர்கள் என நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்டவர்கள் இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர். இவ்வாறானவர்களுடன் ஒருபோதும் அரசியல் பயணத்தை தொடரமுடியாது. கட்சி உறுப்புரிமையையும் நான் விரும்பவில்லை. வீழ்ச்சியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு சில காலம் தேவைப்படுகின்றது என   தெரிவித்துள்ளார்.