தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நல்லூரில் இன்று பொதுக் கூட்டம்
.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்துத் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்ட நிகழ்வில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் கலந்து கொள்ளவுள்ளார்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அரசியல் ஆய்வாளர்களான ம.நிலாந்தன், சி.அ.யோதிலிங்கம், ஆ.யதீந்திரா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்