Breaking News
தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு?; வெளியானது விசேட அறிக்கை
.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
வவுனியாவில் இன்று காலை கட்சியின் அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறீதரன் எம்.பி, மேற்படி தீர்மானத்தில் தனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்டார்.
எனவே, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு அவர் இதன்போது பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.