ரஷ்யாவும் வடகொரியாவும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை!
ரஷ்யா-உள் கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவும் சீரமைக்கவும் அதன் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் தொழிலாளர்கள் தேவை.
சர்வதேச பின்னடைவு மற்றும் ராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு.
ரஷ்யாவும் வடகொரியாவும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.
டோங்-ஏ பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான டாக்டர் காங் டோங்-வான் கருத்துப்படி, “வடகொரியாவிற்கு ரஷ்யாவிடம் இருந்து தற்போது மிகவும் தேவைப்படுவது தொழிலாளர்கள் அனுப்பும் வெளிநாட்டு நாணயம் ஆகும். இதனால் வடகொரியா அதிகளவிலான தொழிலாளர்களை ரஷ்யாவிற்கு அனுப்பும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.
ரஷ்யாவை பொருத்தவரை போரினால் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் உள் கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவும் சீரமைக்கவும் அதன் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் தொழிலாளர்கள் தேவை.
“யுக்ரேன் போருக்காக புதிய படைகள் திரட்டப்பட்டதாலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்றதாலும் ரஷ்யா கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், வட கொரியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டாக்டர் காங் கூறுகிறார்.
எவ்வாறாயினும், வட கொரியாவிற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதாரத் தடைகளின்படி வட கொரிய தொழிலாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதைத் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட கொரிய தொழிலாளர்களையும் 22 டிசம்பர் 2019 க்குள் திருப்பி அனுப்புவதை அது கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா, வட கொரிய தொழிலாளர்களை பணியமர்த்த அதிகாரப்பூர்வமாக முயற்சிகள் மேற்கொண்டால், அது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
சர்வதேச பின்னடைவு மற்றும் ராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதை சர்வதேச அளவில் அனைவரும் உற்று நோக்குகின்றனர்.