Breaking News
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று, அனுரகுமார திசாநாயக்கவை நேற்று ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் சந்தித்தது.
சீன உயர்மட்ட தூதுக்குழு அனுரகுமார வுடன் சந்திப்பு
சீன உயர்மட்ட தூதுக்குழு அனுரகுமார வுடன் சந்திப்பு
சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை நேற்று ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் சந்தித்தது.
தூதுக்குழுவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத்திணைக்களத்தின் தலைவர் லியு ஜியான்சாவோ மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் சென் சியாங் யுவான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் .
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தேர்தலுக்கான ஆயத்தங்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேசிய மக்க சக்தியின் பிரதிநிதிகள் தூதுக்குழுவிற்கு எடுத்துரைத்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போதுதேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய,மற்றும் கட்சி உறுப்பினர்களான சுனில் ஹந் துன்னெத்தி மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.