Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேர்தலை யுத்தம் போல் நினைக்க வேண்டும்: ரணில் தோற்றால் அழிவு நிச்சயம்

.

இலங்கையில் இப்போது சரியான தலைவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஒருநாள் ஒரு வீட்டில் தீப்பற்றிக்கொண்டது. வீட்டில் உள்ளவர்கள் அச்சத்தில் இருந்தனர். அவர்களை மீட்க எவரும் வரவில்லை. அப்போது ஒரு தலைவர் வந்து தீயை அணைத்தார்.

பின்னர் வந்த சிலர் வீட்டுக்கு வர்ணம் பூசினர். பின்னர் தீயை அணைத்தவரை அவர்கள் திருடர் என்று சொன்னார்கள்” – என்று புத்த பெருமான் ஒரு போதனையில் சொல்லியிருக்கிறார். அப்படித்தான் இலங்கையின் நிலைமையும் இருந்தது.

ஜனாதிபதி பதவியைத் தட்டில் வைத்து தந்தபோதும்கூட எவரும் நாட்டை ஏற்க முன்வரவில்லை. அப்போது சில காலம் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளுமாறு மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரினார்.

அரசியல்வாதிகளுக்குப் பொறுமை இருக்கவில்லை. மக்களுக்குப் பொறுமை இருந்தது. எனவே, நாட்டில் இப்போது சரியான தலைவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கிறீஸ் நாட்டில் ஒரே வருடத்தில் நான்கு ஆட்சிகள் வந்தன. அப்போது அரச ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதமாக வெட்டப்பட்டது.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கான எந்த நிவாரணத்திலும் கைவைக்கவில்லை. நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க வழிசெய்தார். அதனால் இந்தப் பாதையை மாற்றினால் பாதகமான விளைவுகளை நாடு எதிர்கொள்ளும்.

அடுத்துவரும் தேர்தலை யுத்தம் போல் நினைக்க வேண்டும். அந்த யுத்தத்தில் தோற்றால் நாட்டு மக்கள் பெரும் அழிவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு சரியான தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.” – என்றார்.