Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சு.க.வை ஐ.தே.க.வுடன் இணைக்கும் திட்டம்!

கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும்.

சு.க.வை ஐ.தே.க.வுடன் இணைக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை. கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பூஜ்ஜிய நிலைக்கு வந்துள்ளது. கட்சி பல கூறுகளாகப் பிளவுபட்டுள்ளது. கட்சியை மீள கட்டியெழுப்புவதென்பது இலகுவான விடயமாக அமையாது.அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார். கிராம மட்டத்திலான மக்கள் சுதந்திரக் கட்சியுடன் உள்ளனர். எனவே, புதிய நபர்களுடன் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன்.

எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார். 60 வயது கடந்ததும் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவேன் எனக் கூறினேன். அவ்வாறு செய்தேன்.கட்சிகள் மற்றும் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே 2015 ஆம் ஆண்டில் பொது வேட்பாளர் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.” – என்றார்.