புகலிடக்கோரிகையாளர்களை அலைக்கழிப்பது என முடிவு செய்துவிட்டது கனடா அரசு !
.
கனடா அரசு புகலிடக்கோரிகையாளர்களை அலைக்கழிப்பது என முடிவு செய்துவிட்டது போலிருக்கிறது.
ஆம், பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுவருகிறது.
கனடாவில் அதிக புகலிடக்கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் சுமையைக் குறைப்பதற்காக, பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுவருகிறது.
கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போதைக்கு 235,825 ஆக உள்ளது.
இந்த புகலிடக்கோரிக்கைகளில் அதிகம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களுக்குதான் அளிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, அம்மாகாணங்களின் பிரீமியர்கள் இந்த புகலிடக்கோரிக்கையாளர்களை சீரான வகையில், மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பிரித்து அனுப்ப வழிவகை செய்யுமாறு பெடரல் அரசைக் கோரியுள்ளார்கள்.
அதன்படி, பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் திட்டமிட்டுவருகிறார்.
ஆனால், இந்த திட்டத்துக்கு பல மாகாணங்களின் பிரீமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
எந்த நிதி உதவியும் அளிக்காமல், புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்புகிறோம், நீங்கள் ஆவன செய்யுங்கள் என பெடரல் அரசு கூறுவது போல இருக்கிறது.
ட்ரூடோ அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.