“பாதுகாப்பு தொடர்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை வேண்டும்“; மருத்துவர்கள் நிபந்தனை
.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்தும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘பணிக்குத் திரும்ப வேண்டும் இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உயர்நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இளநிலை மருத்துவர்களின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இப் பேச்சு வார்த்தையின்போது மம்தா பேனர்ஜி மருத்துவர்கள் முன்வைத்திருந்த மூன்று நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.
மம்தா பேனர்ஜி மேல் இருந்த நம்பிக்கையை மேற்கு வங்க மக்கள் இழந்துவிட்டனர்.
இதன் காரணமாக மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டும் என பாரத ஜனதா கட்சி (பா.ஜ.க) வலியுறுத்தி வருவதோடு, அதனை நிறைவேற்றும் வரையில் பா.ஜ.க போராட்டத்தை தொடரும் என மாநில தலைவர் கூறியுள்ளார்.
இதன்படி, நேற்று புதன்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரையில் மருத்துவர்கள் கலந்து ஆலோசனை நடத்தியதில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரையில் பணி நிறுத்தமும் போராட்டமும் தொடரும்.
மாநில அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என இளநிலை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இப் பணி நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்குவங்க அரசின் அதிகாரிகளுக்கும் இளநிலை மருத்துவர்களுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனாலும் இப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.
இக் கூட்டத்தின் அறிக்கையை எழுத்துப்பூர்வமாக அரசு கொடுக்க மறுத்ததாக மருத்துவர்கள் குற்றம் சாட்டினர்.
அதன்படி மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையை அரசு வெளியிடும் வரையில் பணி நிறுத்தம் மற்றும் போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.