ஈழத்தமிழரின் அரசியல், சமூக தடைகள் பற்றி பிரெஞ்சு நாடாளுமன்றதில்!- தமிழ் இளையோர்,
.
பிரான்ஸ் நாடளுமன்றத்தில் தமிழ் இளையோர்,ஈழத்தமிழரின் இன்றைய அரசியல் நிலமை பற்றியும்,தமது அரசியல் சமூக முன்னெடுப்புகளுக்கு உள்ள தடைகள் பற்றியும் பிரெஞ்சு நாடாளுமன்ற பிரதிநிதிக்கு எடுத்துரைப்பு!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 29/11 வெள்ளியன்று மாலை பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநி கார்லோஸ் மாட்டீன் பிலோங்கோ மற்றும் நா.க.த.அரசாங்கத்தின் துணைப்பிரதர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் எம் இனம், LUTS.அமைப்புகளைச்சேர்ந்த 40 இற்கு மேற்பட்ட அடுத்த தலைமுறையினர் கலந்துகொண்டனர்.
கார்லோஸ் பிலோங்கோ தனது உரையில், தனது தொகுதியில் உள்ள ஈழத்தமிழர்களோடு சிறுவயதில் இருந்து தான் பழகிவருவதால் அவர்களுடைய இன்றைய அரசியல் நிலமை தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும் கூறியிருந்தார்.
இந்திகழ்வில் உரையாற்றிய பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
நா.க.த.அரசாங்கம் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக
குறிப்பாக சட்டப்போராட்ட முன்னைடுப்புகள் பற்றி விளக்கியிருந்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இளையோர்கள் தமிழர்களின் இன்றைய அரசியல் நிலமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து விளக்குவதற்கு இருக்கின்ற தடைகள் பற்றி விரிவாக எடுத்து விளக்கியிருந்தனர்.
விடுதலைப்புலிகள் மீதான தடை தம்முடைய சந்திப்புகள்,அரசியல் கருத்துரைப்புகளுக்கு தடையாக இருப்பதனை விளக்கியிருந்தனர்.
தமது ஆர்ப்பாட்டங்கள்,சந்திப்புகள் பிரச்சாரங்களின் போது தமது அடையாளத்தை வெளிப்படுத்தும் தமிழீழ தேசியக்கொடியை முன்னிறுத்த முடியாதிருப்பதை எடுத்துக்கூறியிரிந்தனர். சுவிஸ் LUTS அமைப்பினர் நாட்டுக்கு நாடு தடைகள் வேறுபட்டிருப்பதையும், தமது நாட்டில் ஒரளவு தளர்வு இருப்பதையும் கூறியிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டசட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற சாருகா தேவகுமார் தமிழர்களுக்கான மாறுகால நீதிபற்றியும், அது தொடர்பாக மேற்கொள்ளும் ஆய்வுகள் பற்றியும் விபரித்திருந்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சட்டவாளர் எய்சே சூய்டி சிறிலங்கா அரசிடம் இருந்து நீதியையோ,தீர்வுகளையோ பெற்றுக்கொள்ள முடியாது என வேறு நாடுகளின் ஆதாரங்களோடு எடுத்து விளக்கினார்.
இந்த உரைகளையும் கேள்விகளையும் செவிமடுத்த. கார்லோஸ் பிலோங்கோ அவர்கள் தமிழர்களின் அரசியல் நிலமைகளை தமது கடசியினருக்கு எடுத்து விளக்கி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதாக கூறியிருந்தார். இறுதியாக இளையோர்கள் தம்மை சிறிலங்கா என அழைக்காது, தமிழர் என அழைக்குமாறும் அவரிடம் கேட்டருந்தனர்.
pmo@tgte.org