Breaking News
சேர நாடு, சோரளம் கேரளமானது! திருவோணத்திருநாள்.
.
மலையாளம் பேசும் மக்களின் தவிர்க்க முடியாத பண்டிகை திருவோணம். ஆனால் சங்க காலத்தில் தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் இருந்ததை அறிவீர்களா? இதனை சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் வாயிலாக நம்மால் அறிய முடிகின்றது. இதற்கு பல்வேறு சான்றுகளும் இருக்கின்றன.
சங்க இலக்கியங்களில் ஓணம்
பத்துப்பாட்டு - பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள் என்று இந்தப் பாடல் விளக்குகிறது
கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர
- மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே”
- பெரியாழ்வார் திருமொழி 6
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்
“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”
- திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர, பேணி
வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று. 41
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
மாயோன் மேய ஓண நல் நாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தட கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்
மாறாது உற்ற வடு படு நெற்றி 595
மதுரைக்காஞ்சி
திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில், தோட்டி (வளைந்த வாள்)வெட்டின வடு அழுந்தின முகத்தை உடையனவும், சாணைக்கல்லால் தழும்பேறின, போரைத் தாங்கும் பெரிய கையினையும், வீரத்தைத் (தம்மிடத்தே)கொண்ட (மறவர்கள் வாழும்)சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரில், அடி)மாறாமையாற்பட்ட (கொம்பு அழுந்தின)தழும்பினையுடைய நெற்றியினையுடையனவும்.
பல நூறு ஆண்டுகள் தமிழர்களின் முக்கியத் திருவிழாவாக இருந்து வந்த 'திருவோணத் திருவிழா பாண்டியர்களின் ஆட்சி மதுரையில் வீழ்ந்ததும் மறைந்தது. பின்னர் கேரளத்துக்குச் சென்ற பாண்டிய குலத்தோன்றல்களின் ஆட்சியின் வழியே கேரள மக்களிடம் மட்டுமே சிறப்பினைப் பெற்றுள்ளது. தற்போது ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது ஓணம். ஆனால் நம் சங்க கால தமிழர்கள் ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடினர். இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஓணம் = நீராட்டு விழா
நன்றி இங்கர்சால் நார்வே.