Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உள்ளூராட்சி சபை அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசு; வர்த்தமானியை மீளப்பெறுவீர்களா? சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி!

,

உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக  வெளிப்படுத்தப்பட்டதால் பிரதேச சபையிலுள்ள அதிகாரங்களை மத்திய அரசின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 
ஆகையால் உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக வெளிப்படுத்தப்பட்ட வர்த்தமானியை மீளப்பெறுவீர்களா என்று சிறீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். 

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான விவாதங்களின் போது நகர அபிவிருத்தி அமைச்சர்   அனுர கருணாதிலகவிடம் கேள்வியெழுப்புகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து பிரதேச சபைகளின் எல்லைகளையும் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
இதனாலேயே தையிட்டி விகாரை உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்தன. இது போன்று பல பிரச்சினைகள் எழுந்ததற்கு காரணம் உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக வெளிப்படுத்தப்பட்டது தான். 

எனவே இது குறித்ததான வர்த்தமானியை உடனே மீளப்பெறுவீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.