Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மத்திய குழு தீர்மானத்தை நியாயப்படுத்தும் தமிழரசு கட்சி: பொது செயலாளர் விளக்கம்

.

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மான் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அதற்கு மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை.

மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள்.

மாவை சேனாதிராஜாவுக்கும் அறிவித்து அவரும் வருவதாக இருந்தார். எனினும், உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது. சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது மத்திய குழு எடுத்த தீர்மானம்.

அதனையே அறிவித்தோம். எதிர்வரும் நான்காம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மூத்த துணைத்தலைவர், மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணத்தில் பேசுவார் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் எந்த சிக்கலும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கருத்து வெளியிடுகையில்,

மத்தியகுழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதை மாவை சேனாதிராஜா முன்கூட்டியே அறிவித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு கூட்டத்துக்குத் தேவையான கோரம் இருந்ததாகவும், ஆகையினால், இந்தத் தீர்மானத்தில் எந்த சிக்கலும் இல்லை.

தீர்மானம் ஒன்றை எடுக்கத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் படி மத்திய செயற்குழு கூட்டத்தில் குறைந்தபட்சம் 11 பேர் இருக்க வேண்டும். நேற்றைய கூட்டத்தில் 26 பேர் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.