Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனேடிய அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள இரண்டு முக்கிய வரிச்சலுகைகள்!

.

எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி முதல் கனேடியர்களுக்கு ஜிஎஸ்டி (GST) உடனான வரிவிலக்குடன், வரிச் சலுகையையும் வழங்கவுள்ளதாக கனேடிய (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, உணவு பொருட்கள், சிற்றுண்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வரி இல்லாமல் கொள்வனவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ் வரிச் சலுகையானது, 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இக் குறித்த சலுகையின் படி, அனைத்து உணவுப் பொருட்களையும் ஜிஎஸ்டி இலவசமாக்குவது கனேடியர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள சேமிப்பை வழங்கும் என அந்நாட்டு அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், வசந்த கால தொடக்கத்தில், தொழில் புரிந்து வரும் கனேடியர்களுக்கு, அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு 150,000 டொலர் வருமானம் ஈட்டியவர்கள் 250 டொலர் பெறுமதியான காசோலையை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.