Breaking News
உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள்;யாழ். இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 3ஏ சித்திகள்.
.
கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
2ஏபி சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடத்தைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47வது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.