Breaking News
காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
.
சவுக்கடியில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு.
சுழிபுரம் – சவுக்கடி பகுதியில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான 4 பரப்பு காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுவீகரிப்பு பணிகளை கைவிட்டு விட்டு நில அளவை திணைக்களம் அங்கிருந்து சென்றது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.